லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகில் உள்ள டாப் நடிகர்களுடன் நடித்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்து கொண்டே இருப்பதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக மாறி உள்ளார் மேலும் நம்பர் 1 இடத்தையும் விட்டுகொடுக்காமல் தன்வசப்படுத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.
நயன்தாரா தமிழ் சினிமா உலகில் அஜித், விஜய், ரஜினி போன்ற பல்வேறு நட்சத்திரங்களுடன் நடித்து பயணித்துக் கொண்டே இருக்கிறார். மறுபக்கம் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி காண்கிறார். இப்பொழுது கூட தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா ஆக்சிஜன், கனெக்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா திடீரென மற்றவற்றிலும் களமிறங்கியுள்ளார் துபாயில் தனது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து பிசினஸ் பண்ணி வருகிறார் மேலும் சாய் வாலா என்ற கடையையும் நடத்தி வருகிறார்.
இப்படி எல்லாத்தையும் பிசினஸ் செய்தி கண்டு வெற்றி மேல் வெற்றியை கண்டு சம்பாதிக்கிறார். அப்படி எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஓடினாலும் சும்மா இருக்கின்ற நேரங்களில் தனது காதலன் விக்னேஷ் அவனை அழைத்துக்கொண்டு அவ்வபொழுது புகைப்படம் எடுப்பது சுற்றுலா செல்வதுமாக இருந்து வருகிறார்.
அதேசமயம் முக்கிய நாட்களில் அதற்கேற்றார்போல புகைப்படங்களை அள்ளி வீசுவதும் இவரது ஸ்டைல் அந்த வகையில் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அதுபோல தற்பொழுது மகளிர் தினத்தை முன்னிட்டும் நயன்தாரா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா கெத்தாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.

