சமிப காலமாக சினிமாவுலகில் டாப் ஹீரோக்களையும் தாண்டி நடிகைகள் பலரும் சோலோ கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம்வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சோலோவாகவும் நடித்து வருகிறார் அதில் இவரது பல திரைப்படங்கள் வெற்றி அடைந்த நிலையில் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் கண் தெரியாதவராக சொலோவாக நடித்து உள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. நயன்தாராவுக்கு இந்த திரைப்படமும் அவரது கேரியரில் ஒரு பேஸ்ட் படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது இந்த திரைப்படம் தற்போது 18 கோடிக்கு விற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் OTT தளத்தில் வெளியாகி அந்த படம் சுமார் 25 கோடிக்கு விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.