சினிமா உலகில் டாப் நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் நடிகைகள் ஒரு கட்டத்தில் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதோடு மட்டுமல்லாமல் சோலோவான படங்களிலும் நடித்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஒரு திரைப்படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு அவ்வளவு வாங்குகிறார் என்பது ஓகே தான் ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் பொழுது அவருக்குகென தனி செலவு இருக்கிறதாம்.
அதையும் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும் என்பது தான் புதிய ஹைலைட். நயன்தாரா உதவியாளருக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும் அவருடைய பாடிகார்ட், ஹேர்டிரசேர், கேரவன் என அவருக்கு மட்டுமே இதர செலவுகளை 12 லட்சம் ரூபாய் கிட்டத்தட்ட கொண்டுபோய் விடுமாம்.
இப்படி சம்பள பணம் இல்லாமல் தாராளமாக செலவு செய்தால் தயாரிப்பாளரின் நிலை என்னாவது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராஜன் செம கோபமாக சில கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஒரு நடிகைக்கு இவ்வளவு செலவு என்றால் மற்ற நடிகர்களின் செலவையும் நாம் கணக்கிட வேண்டும்.
இதையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் ஈடுகட்டி அதிக லாபம் எடுத்தால் மட்டுமே அவர் முன்னேற முடியும் இல்லை என்றால் அவர் தெருவுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் என கோபமாக சொன்னார்.