சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது மார்க்கெட் குறையும் அப்படித்தான் காலம் காலமாக எழுந்து வருகிறது ஆனால் நயன்தாராவுக்கு மட்டும் அது எதிராக இருக்கிறது ஆம் கல்யாணத்திற்கு பிறகு தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாலும் தற்போதும் வாய்ப்புகளை அதிகம் அள்ளி வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் கனெக்ட். இதனைத் தொடர்ந்து கைவசம் கோல்டு, ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை வைத்திருக்கிறார். இந்த நிலையில் கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அழகாக பதில் அளித்துள்ளார் நயன்தாரா. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று போடப்பட்டது அதற்கு தனது கணவருடன் வந்து படத்தை பார்த்தா
மேலும் வெளியே வந்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது என்னவென்றால் எனது கணவர் விக்னேஷ் சிவன் எனக்கு இரண்டு கிப்டுகளை கொடுத்தார் என கூறினார் மேலும் கனெக்ட் படம் குறித்து பேசும்பொழுது சத்யராஜை பார்க்கும் பொழுது எனது அப்பா ஞாபகம் வரும் என அவர் கூறினார்.
இப்படி இருக்கின்ற நிலையில் கனெக்ட் படத்தை 5 கோடி பட்ஜெட்டில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்தனர். இப்போ இந்தப் படத்தை netflix நிறுவனம் 15 கோடிக்கு வாங்கி உள்ளது இதன் மூலம் நடிகை நயன்தாராவுக்கு சுமார் 10 கோடி லாபம் கிடைத்துள்ளது.