ரொமான்ஸ் கலந்த காமெடி அதிரடியாக களம் இறங்கிய விக்னேஷ் சிவன்,நயன்தாரா.!

0

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகள் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டால் உடனே அவர்கள் காதல் திருமணம் செய்து விடுவார்கள் அந்த வகையில் அஜித் ஷாலினி பிரசன்னா-சினேகா என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும்.

மேலும் அந்த வகையில் லிவிங் டுகெதர் என்ற வாழ்க்கை முறைப்படி வாழ்ந்து வரும் காதல் ஜோடிகள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் 2 பேரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது காதல் மலர்ந்து விட்டது.

அவர்கள் 2 பேரும் காதலித்து வருகிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் ஊர் சுற்றும் பொழுது எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது கூழாங்கல்,ராக்கி உலக விழாவில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்றிருந்தது.

nayanthara
nayanthara

இதனையடுத்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க போகிறார்களாம் அந்தத் திரைப்படத்திற்கு வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் காதல் காமெடி கொண்ட கதையை படமாக எடுக்க போகிறார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதில் பாடகி ஜோனிட காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து இந்த தகவல்  ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.