காதும் காதும் வைத்தது போல கல்யாணத்தை கச்சிதமாக முடித்த நாயகி சீரியல் நடிகை.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

0

nayagi movie actress latest news: பிரபல சின்னத்திரை நடிகைகள் வீட்டில் அவ்வப்போது சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இவ்வாறு அவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி ஏதேனும் குறிப்புகள் கிடைத்துவிட்டால் போதும் அதனை சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சீரியல்நடிகை பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளன. இவர் சன் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இவ்வாறு இந்த சீரியல் ஆனது சுமார் மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகி இருந்தன.

இந்த வகையில் இவருடைய கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் திரண்டது மட்டுமல்லாமல் ஒரு நேரத்தில் வைரஸ் தாக்கத்தின் காரணமாக அந்த சீரியலில் நடித்து வந்த பல நடிகைகளை மாற்றம் செய்தார்கள். என்னதான் மாற்றம் செய்தாலும் இந்த சீரியலை மிஞ்ச எந்த ஒரு சீரியலும் உருவாகவில்லை.

அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையான அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்த வில்லிதான் நமது பிரதீபா. இவர் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை பெரும் அளவிற்கு கவர்ந்து விட்டார்.

pradeepa-2
pradeepa-2

அந்த வகையில் தற்போது தான் காதலித்த காதலனை சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு நடந்த திருமணத்தில் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவருடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் நாயகி சீரியல் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

pradeepa-1
pradeepa-1