உதவி இயக்குனரை ரத்தம் வரும் அளவிற்கு அடித்துள்ள நவீன்.! இதற்கு முன்பு இவரால் என்னுடைய முதுகெலும்பு உடைந்ததாக பெரும்பரப்பை ஏற்படுத்திய இதயத்தை திருடாதே சீரியல் நடிகை..

0
idhaiyathai-thirudathe
idhaiyathai-thirudathe

சின்னத்திரையில் தற்பொழுது ரசிகர்களின் ஃபேவரட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நவீன் சீரியல் உதவியக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் கிடைத்தது பிறகு கலர்ஸ் தமிழில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.

இந்த சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மேலும் இவ்வாறு சீரியலுக்கு வரும் முன்பே பல திரைப்படங்களில் குணசத்திர புகாதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மலையாளத்தில் money Ratnam என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகராக நடிப்பை தொடங்கினார் அதன் பிறகு தமிழில் மசாலா, பூலோகம், பட்டாசு, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வந்தார்.அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தான் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் கிருஷ்ணா நகரில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்ற இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் சூட்டிங் வரவில்லை என்பதற்காக உதவி இயக்குனர் குலசேகரன் நவீனை அழைத்து வருவதற்காக அவருடைய அறைக்குச் சென்றுள்ளார்.

அவ்வப்போது இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் திடீரென உதவி இயக்குனர் குலசேகரன் கன்னத்தில் நவீன் தொடர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சூட்டிங் பாதிலேயே நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது மேலும் இதனால் உதவி இயக்குனர் கண்ணுக்கும் கீழே ரத்தம் வந்திருக்கிறது இதனால் புது உதவி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

nilaani
nilaani

இவ்வாறு சின்னத்திரை சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் இயக்குனர் குலசேகரன் நவீன் மீது புகார் அளித்துள்ளார் இதனால் மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து இருக்கிறார் மேலும் தற்பொழுது போலீஸ் இரண்டு தரப்பினர்களிடமும் விவாதித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இதயத்தை திருடாதே சீரியல் நடிகை நிலானி ‘இதயத்தை திருடாதே சீரியலில் நான் நவினுடன் வேலை செய்து இருக்கிறேன் ஒருமுறை என்னை தள்ளிவிடுற மாதிரி காட்சியில் நிஜமாகவே என்னை தள்ளி என்னுடைய எலும்பில் ப்ராக்சர் ஆகியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

nilani
nilani

மேலும் இதே போல் நவீன் அவரை அடித்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜமாகவே அவருக்கு கோபம் வரும் நடிப்பதை விட ஒரிஜினலாக கோபப்பட்ட தான் நவீனுக்கு பண்ண தெரியும் இவ்வாறு ஒரு முறை மட்டுமல்ல இரண்டு மூன்று முறை இவ்வாறு நடந்து இருக்கிறது’என கூறியது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.