ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்.! நட்டி போட்ட பதிவிற்கு ப்ளூ சட்டை மாறன் குசும்பை பார்த்தீர்களா.! கருப்பன் குசும்பு காரன் தான்..

அக்னிபாத் திட்டத்திற்கு நடிகர் நட்டி போட்ட பதிவிற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பெரும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடராஜன் சுப்பிரமணியன் இவரை எல்லோரும் நட்டி என்று தான் அழைப்பார்கள். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய யூத் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் அதன்பிறகு நடிகராக மக்கள் மத்தியில் நாளை, சக்கரவியூகம், முத்துக்கு முத்தாக, சதுரங்கவேட்டை ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார் இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சதுரங்கவேட்டை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் மோடியின் அக்னி பாதை திட்டம் குறித்து  நடிகர் நட்டி நடராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு படுவேகமாக வைரலாகி வருகிறது. அதாவது தற்போது இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி புரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் திட்டம்தான் அக்னி பாத் திட்டம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது இந்த அறிவிப்பு வெளியான முதல் பீகார் உத்திரப் பிரதேசம் தெலுங்கானா என பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.

natti
natti

அதுமட்டுமில்லாமல் இந்த பணியில் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு அரசு பணிகள் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் சில துறைகளும் அறிவித்துள்ளார்கள் இருந்தாலும் பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் ஆனால் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்பு துறை உயரதிகாரி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

ஆனாலும் பலரும் இந்த திட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் நபியவர்கள் தன்னுடைய சமூக வலைதளமான டுவிட்டரில் அக்னிபாத் குறித்து  நட்டி பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்ற வழிவகை செய்யும் மத்திய அரசின் இந்த நிமிஷம் எனக்கு இராணுவத்தின் அனுமதி கிடைத்தால் அனைத்தையும் விட்டுவிட்டு ராணுவத்தில் சேருவேன் தேசமே தெய்வம் என பதிவிட்டுள்ளார்.

blue sattai
blue sattai

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஒருத்தன ஏமாத்தனும்ன்னா அவன் ஆசைய தூண்டனும் என  சதுரங்க வேட்டை டயலாக்கை மீம்ஸ்ஸாக வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ப்ளூ சட்டை மாறன் நட்டியை கலாய்த்து வரும் கமெண்ட் ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment