1994 ஆம் ஆண்டுக்கு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் நாட்டாமை இந்த திரைப்படம் அப்பொழுது வெளியாகி மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர் மனதிலும் நாற்காலி போட்ட அமர்ந்தவர் நடிகை ராணி இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் கர்ணா, அவ்வை சண்முகி, ஜெமினி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ராணியின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் தான் கொம்பு சீவி இந்த திரைப்படத்தில் ராணியின் மகள் தார்னிகா நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது மேலும் நாட்டமை படத்தில் நடித்த டீச்சரை போலவே அவரின் மகள் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.