90 காலகட்டத்தில் பறவை நடிகர்கள் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்த வகையில் ராணியும் ஒருவர், இவர் 1992 ஆம் ஆண்டு ராமநாதன் நடிப்பில் வெளியாகிய வில்லுப்பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.
ஆனால் சினிமா உலகத்திற்கு முதன் முதலில் அறிமுகமானது மலையாளத் திரைப்படத்தில் தான், அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முதன்முதலில் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார்.
கங்கை அமரன் வில்லுபாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் ராணியை அறிமுகப்படுத்தினார், அதனைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
முதலில் நாட்டாமை திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார் பின்பு படக்குழுவின் வற்புறுத்தலால் தான் இந்த கதாப்பாத்திரத்திற்கு நடிப்பதற்கு ஓகே கூறினார் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது அதனால் பிரபலம் அடைந்து விட்டார்.
இதனை பலமுறை அவரே பேட்டியில் கூறியிருந்தார், ரசிகர்கள் இன்னும் ராணியை மறக்காமல் இருப்பதற்கு காரணம் நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததால் தான். அதன் பிறகு காதல் கோட்டை அவ்வை சண்முகி நம்ம அண்ணாச்சி ஜெமினி காதல் சடுகுடு என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் 2012ம் ஆண்டு வெளியாகிய ஊலலா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என முழுவதுமாக கிளாமரில் இறங்கி கலக்கினார் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடளில் கிளாமரில் நடித்து கலக்கினார்.
இவர் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பாளராக உருவெடுத்தார், அதுமட்டுமில்லாமல் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார் அவர் கல்லூரியில் படித்து வருகிறார், தன்னுடைய மகள் வளர்ந்து விட்டதாக இனி கிளாமரில் நடிக்க மாட்டேன் என கூறினார். அதன்பிறகு படத்தை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த நிலையில் இவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.