அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் தேசிய விருது பெற்ற இயக்குனர் – யார் அந்த இயக்குனர் தெரியுமா.? உங்களுக்கு வாய்ப்பு உண்டு என கூறும் தல ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக உருமாறுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அஜித்.

இவரது நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு ரசிகர்கள் பிடித்த படமாக இருந்து வந்துள்ளன அந்த வகையில் விசுவாசம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாக ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் அண்மைகாலமாக வலிமை படத்தின் அப்டேட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.  இது இப்படி இருக்க அஜித் அடுத்த படத்தில் யாருடன் இணைவார் என்பதே மிகப்பெரிய ஒரு சஸ்பென்ஸ் ஆக இருந்து வந்துள்ளது ஏனென்றால் அது தற்போது அடுத்த படத்தில் இணையாமல் தற்பொழுது ஒய்வு எடுத்து வருகிறார்.

மேலும் இந்தியாவை சுற்றி பைக்கில் வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கொச்சியை சேர்ந்த இளம் வயது இயக்குனர் ஒருவர் அஜீத்துடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார். கொச்சி சேர்ந்த 12 வயதான ஆஷிக் ஆறு குறும்படம் ஒரு ஆவணப்படம் உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வென்ற அவர் அண்மையில் கூட இவர் போதை விழிப்புணர்வு குறித்து சிபிஐ என்ற பெயரில் வணிகரீதியான ஒரு படத்தை இயக்க உள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இவர் தனது புகைப்படங்களை அஜித் அவர்களிடம் காண்பித்து வருங்காலத்தில் அவரை வைத்து படம் இயக்க ஆசையாக இருப்பதாக கூறினார். இச்செய்தி தற்பொழுது தல ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளதால் கொண்டாடி வருகின்றனர்.