தேசிய விருதை தட்டிச்சென்ற தமிழ் திரைப்படங்கள்.! அட இந்த தமிழ் படமும் உண்டா.!

இந்தியாவில் வருடம் வருடம் தேசிய விருதுகள் நடிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டின் விருது கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய விருதுகளை வென்ற நட்சத்திரங்கள் யார் யாரென்று ஒரு லிஸ்ட் சமூக வலைதள பக்கங்களில் இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகி விட்டது.

ஆம் 2019 ஆம் ஆண்டின் தேசிய விருதுகளை சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் வென்றுள்ளார் மேலும் சிறந்த படத்திற்கான விருதை அசுரன் திரைப்படம் வென்றுள்ளது.

மேலும் மற்ற பிரிவில் இருந்தும் திரைப்படங்கள் விருதுகளை வென்றுள்ளது என்பதை நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம் ஆம் ரீரெக்கார்டிங்-ஒத்த செருப்பு,ஸ்பெஷல் மேன்சன்-ஒத்த செருப்பு,சிறந்த துணை நடிகர்-விஜய் சேதுபதி [சூப்பர் டீலக்ஸ்] சிறந்த இசை-டி இமான் [விஸ்வாசம்] சிறந்த குழந்தை நட்சத்திரம்-நாகா விஷால் [கேடி [எ]கருப்பு துரை].

மேலும் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்கள் பலரும் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் விருது வென்றதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த விஷயத்தை கொண்டாடி வருகிறார்கள்.

dhanush
dhanush

Leave a Comment