திருமணதிற்கு பிறகும் சீரியலில் களம் இறங்கும் நாதஸ்வரம் ஸ்ரித்திகா.! எந்த தொலைக்காட்சி எந்த சீரியல் தெரியுமா.?

srithika-1

ஒரு சில நடிகைகள் அறிமுகமான தனது முதல் சீரியலிலேயே  ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள் அவர்கள் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலும் அவர்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள்.

இந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை பெற்ற நாதஸ்வரம் சீரியலின் மூலம் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் தான் ஸ்ரிதிகா. இவர் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் வெண்ணிலா கபடி குழு, வேங்கை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார். இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை.

அதோடு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். இந்த வகையில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியளுக்கு பிறகு சீரியல்களில் நடிப்பதிலிருந்து சற்று பிரேக் எடுத்து கொண்டார்.

sruthika
sruthika

இந்நிலையில்  ஸ்ரிதிகா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சீரியல்களில் நடிப்பதை தொடங்கியுள்ளார். அதாவது தற்போது மகராசி சீரியலில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.எனவே இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிப்பதால் இவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.