தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு ஆரம்பத்தில் படவாய்ப்புகள் குவியத்துண்டு ஆனால் போகப்போக பட வாய்ப்புகளை அமையாமல் இருந்து வருவார்கள் அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்து இன்று பெரிதாக பட வாய்ப்பு இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் நரேன்.
நரேன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் இவர் முதன்முதலில் நீசல் குத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களான 4 திபீபில் அச்சுவின்டே அம்மா மற்றும் வகுப்பு தோழர்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகிய சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகருடன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல மலையாளத் திரைப்படத்திலும் தமிழ் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் தமிழில் நடித்த நெஞ்சிருக்கும் வரை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தது இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது தான் காதலித்த பெண்னுக்காக் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இதயத்தை கொடுத்து ஒட்டு மொத்த ரசிகர்களின் இதயத்தை வென்றவர்.
அந்த காட்சி இன்னும் பல ரசிகர்களின் பேவரைட் காட்சியாக பார்க்கப்படுகிறது மேலும் மிஸ்கின் அவர்கலுடன் மீண்டும் அஞ்சாதே என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்தார் அந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது அதன்பிறகு முகமூடி திரைப்படத்திலும் நடித்து இருந்தார் அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தியுடன் இணைந்து கைதி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நரேனின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் நரேனின் மகள்இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.
