தனது பெயரை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த நெப்போலியன்.!

1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகிக்கு  தந்தையாக வித்தியாசமான வில்லன் கேரக்டரில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகர் நெப்போலியன். அதன் பின்னர் சின்ன தாயி, பரதன், ஊர் மரியாதை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார்.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. மேலும் இந்த திரைப்படத்தில் ராகுல் சுகன்யா நெப்போலியன் பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் குமரேசன் துரைசாமி என்று தான் அறிமுகமானார் நெப்போலியன்.

அதன் பின்னர் பாரதிராஜா குமரேசனை அழைத்து நெப்போலியன் என்னும் பெயரை வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் நெப்போலியன் தன்னுடைய நண்பர்களிடம் பாரதிராஜா தனக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறியுள்ளார் இதை பார்த்து நெப்போலியன் நண்பர்கள் கேலி செய்து சரக்கு பாட்டிலுக்கு வைக்க வேண்டிய பெயரை உனக்கு வைத்திருக்கிறார்கள் என கேலி கிண்டல் செய்துள்ளனர்.

உடனே ஆத்திரமான நெப்போலியன் உங்கள மாதிரி அருண், விஜய், சங்கர் என பெயர் வைத்தால் என்னால் தமிழில் மட்டும் தான் நடிக்க முடியும் ஆனால் நெப்போலியன் என்ற பெயர் வைத்ததால் நான் ஹாலிவுட் படங்களிலும் நடிப்பேன் என்று சவால் விட்டு உள்ளார்.

அந்த சவாலை நடிகர் நெப்போலியன் செய்து காட்டியும் இருக்கிறார். ஆம் 1994 ஆம் ஆண்டு வெளியான சீவலப்பேரி பாண்டி திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவான இமேஜ் பெற்றார். அதன் பிறகு  நெப்போலியன் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்தையும் ஏற்று நடித்தார்.

அதன் பிறகு நெப்போலியன் அவரின் நண்பர்களிடம் சொன்னபடியே ஹாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து சாதித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்துமஸ் கூப்பன் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் நெப்போலியன்.

இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் டெவில்ஸ் நைட், ட்ராப் சிட்டி, ஒன் மோர் ட்ரீம், ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதிலும் நெப்போலியன் அவர்கள் நடித்துள்ளார்.

Leave a Comment