முறுக்கு மீசை நெப்போலியனுக்கு இத்தனை சகோதரர்களா.! அச்சு அசல் நெப்போலியன் போலவே இருக்கிறாரே.!

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராகவும், வில்லனாகவும்  வலம் வந்த நடிகர் நெப்போலியன் ஆவார். இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது அதிகபடியான கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக கட்சியை சேர்ந்தவர் ஆவார் அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் பெரம்பலூர் தொகுதிக்கு எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியன் அழகிரியின் விசுவாசியாக இருந்து வந்த நிலையில் ஒருசில பிரச்சினையின் காரணமாக திமுகவை விட்டு வெளியேறி  பாரத ஜனதா கட்சியில் இணைந்தார்.

நெப்போலியன் தமிழ் திரைஉலகில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் 1991இல் அறிமுகமாகி 70க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து முன்னணி நடிகராக இன்றளவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். எனவே இவருடைய மூத்த மகன் தனுஷின் விருப்பத்திற்காக பாரினிலே செட்டிலாகி விட்டனர். தற்பொழுது அவரின் மகன் உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொண்டு வருகிறார்.

napoleon actor
napoleon actor

இந்த நிலையில் நெப்போலியன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் அதில் ஒரு அண்ணன் நெப்போலியனை போல் அச்சு அசலாக இருப்பார் தற்பொழுது இவர்களுடைய புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய அண்ணன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல்லாக நெப்போலியனை போல உள்ளாரே என வியந்து வருகின்றனர்.

napoleon actor
napoleon actor

Leave a Comment