தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் நெப்போலியன், இவர் தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு கிழக்கு சீமையிலே, தாயகம் , சுயம்வரம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்தது சிவகார்த்திகேயனின் சீமா ராஜா திரைப்படத்தில் தான். இந்த நிலையில் இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் கிறிஸ்மஸ் கூப்பன் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடிக்கிறார், இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தற்பொழுது போட்டோ ஷூட் எடுத்துள்ளார்கள் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதைப்பார்த்த ரசிகர்கள் நெப்போலியனுக்கு இப்படி ஒரு ஜோடியா, தனுஷுக்கே இப்படி ஒரு ஜோடி கிடையாது என கமெண்ட் செய்தும் வாழ்த்து கூறியும் வருகிறார்கள்.
