இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் ஜொலிக்கும் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்.!

பொதுவாக சன் டிவியில் முன்பெல்லாம் இழுத்து பொத்தி கொண்டு நடிக்கும் குடும்ப குத்து விளக்குகளை வைத்து பல சீரியல்களை இயக்கி வந்தார்கள். ஒரு காலத்தில் இது ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் தற்பொழுது உள்ள ரசிகர்களுக்கு கவர்ச்சியில் ஆர்வமுள்ள நடிகைகளை தான் பிடிக்கிறது.

அந்த வகையில் சன் TRP-யில் அடி வாங்கியதால் தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வமுள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி பிரபலமடைந்து வருகிறார்கள். இந்த வகையில் சன் டிவியில் ராஜ் கபூர் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நந்தினி.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.  அந்த வகையில் நந்தினி சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை நித்யா ராம். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அவள் சீரியலின் மூலம் தான் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.

அதன் பிறகு இவரின் சிறந்த நடிப்பினால் இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்நிலையில் நித்யா ராம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

அதன்பிறகு நித்யா ராம் வேறு ஒருவரை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நித்யா ராம் சீரியலில் நடித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருந்தாலும் நித்யா ராம் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டு திருமணமானாலும் நீங்கள் ரொம்ப அழகாக  இருக்கிறீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version