பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நாஞ்சில் விஜயன் திருமணம்.. வைரல் புகைப்படம்

nanjil vijayan 2
nanjil vijayan 2

Nanjil Vijayan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி விஜய் டிவியின் நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலரும் பிரபலமடைந்து இருக்கின்றனர்.

முக்கியமாக கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் பிரபலமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் இருந்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் பெண் கெட்ட போட்டு காமெடி செய்யும் அனைத்து எபிசோடுகளும் ஹிட்டானது.

தற்பொழுது இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் பணியாற்றி வந்த நாஞ்சில் விஜயன் ஒரு கட்டத்தில் ஜீ தமிழிலும் பணிபுரிய ஆரம்பித்தார்.

nanjil vijayan
nanjil vijayan

இதன் மூலம் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நாஞ்சில் விஜயன் நண்பர்கள் மூலம் தனக்கு அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எனவே நாஞ்சில் விஜயனுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

nanjil vijayan
nanjil vijayan

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாஞ்சில் விஜயன் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் நிலையில் விரைவில் தனது திருமண வீடியோவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.