ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார் இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார், வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர், தற்பொழுது இவர் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம் தான் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டை முதல் மனைவி முன்வைத்துள்ளார், ஆனால் இவ்வளவு நாள் எங்கே போனார் நான் திருமணம் செய்து கொண்டதும் வந்து பிரச்சினை செய்கிறார் என கூலாக பதில் சொல்கிறார் வனிதா.
இப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வனிதாவிடம் வாங்கி கட்டிக் கொண்டார்கள். வனிதாவும் யார் கேவலமான பதில் சொன்னாலும் அவர்களுக்கு அவர்கள் வார்த்தையிலேயே பதிலடி கொடுத்து வருகிறார், அந்தவகையில் சூர்யா தேவி என்பவர் வனிதாவின் மூன்றாவது திருமணத்தை கடுமையாக விமர்சித்தார்.
அங்கு வெடித்தது பூகம்பம் அன்றிலிருந்து இன்றுவரை சூர்யா தேவி மற்றும் வனிதா இருவரும் சமூகவலைதளத்தில் அடித்துக் கொண்டு வருகிறார்கள், இவர்களின் சண்டை ஓய்ந்தபாடில்லை, அந்த வகையில் சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் இருவரும் வனிதாவை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் நாஞ்சில் விஜயன் வனிதாவின் சில முக்கிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த வனிதா நாஞ்சில் விஜயன் சூர்யா தேவி இருவரும் கையில் சரக்கு கிளாஸ் உடன் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா இதுதான் தமிழ் கலாச்சாரம் என விளாசி எடுத்துள்ளார், இதனை பார்த்த பல இணையதள வாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அவற்றில் சில கருத்துக்கள் இதோ.
நாஞ்சில், சூரியா, கஸ்தூரி, லஷ்மி, லஷ்மி, ரவிசங்கர்…இவர்லெல்லாம் மற்றவர்களின் குடும்பத்தில் மூக்கு துழைப்பதே, தங்கள் சொந்த வாழ்க்கை ரகசியங்களை மூடி மறைக்க தான் ? idiot
— Sukanthy Sukanthy (@SukanthySukant1) August 1, 2020
கட்டின புருஷன் விட்டுட்டு போயிட்டா குழந்தைகளை காப்பாற்றுவதற்காக பொம்பளைங்க சில பேரு இந்த மாதிரி பண்றது தப்பே இல்ல அவ குழந்தைகளுக்காகத் தான் சில தவறுகளை பண்ணி அவங்க பட்டினியை போகிறா அடுத்தவங்க புருஷனை கூட்டிட்டு வந்து வாழல அதனால ஒருவேளை சூர்யா இந்த தப்பு பண்ணி இருந்தா அது தப்பே இல
— Deepa Sridhar (@DeepaSridhar115) August 1, 2020
Tamil kalacharam and ethics..trying to portray a woman negatively who has bravely survived through her terrible past and still managed to make her life a success and never gave up on her life or kids and lives with dignity is not getting anyone anything or anywhere. pic.twitter.com/ddpIiCFVjV
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 1, 2020
பொண்டாட்டி சரி இல்லனு புருஷனுங்க இன்னொரு கூத்தியா வைச்சுக்கிட்டு போனா தமிழ் நாட்டுல வாழ தகுதியே இல்லாம போயிரும்.. அப்டி எத்தன பேருக்கு தா வாழ்க்க குடுப்ப வனிதா அக்கா சொல்லு உனக்கு தாராள மனசு
— Zarah (@Zarah48052085) August 2, 2020
பெரும்பாலான ரசிகர்கள் இதுபோல் புகைப்படத்தை ஷேர் செய்ய வேண்டாமென கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் இது போல் வனிதாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக தற்போது அதனை பிரண்ட்ஷிப் என கூறியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் கலாச்சாரம் என வனிதா கூறியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
இதை பார்த்த பல ரசிகர்கள் உங்களுக்கு வந்தா ரத்தம் அவுங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என கமெண்ட் செய்து வருகிறார்கள். நீங்க பண்ணினா பிரெண்ட்ஷிப் மத்தவங்க பண்ணுனா கலாச்சாரம் என கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்