சைக்கோவாக மிரட்டும் தனுஷ்.! வெளியானது நானே வருவேன் திரைப்படத்தின் டீசர்.!

0
nane-varuven
nane-varuven

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் நானே வருவேன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவும் இருவரும் ஒரே படத்தில் பணியாற்றி வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் இவர்கள் மூவரும் இணைந்து புதுப்பேட்டை திரைப்படத்தில் பணியாற்றினார்கள் அதன் பிறகு நானே வருவேன்  திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடைய அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் மேலும் தனுஷ்க்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் யோகி பாபு, பிரபு, எலி அவுராம்  என பல நடிகைகள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தை எஸ் தானு தான் தயாரித்துள்ளார் அதுவும் வீ கிரியேஷன் சார்பில். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது. இந்த நிலையி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.

இந்த டீசரில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது அதுமட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் மிரட்டியுள்ளார். ஒரு தனுஷ் கிட்டத்தட்ட சைக்கோ போலவே நடந்து கொள்கிறார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு டீசர்.