தனுஷை புரட்டி எடுத்தாரா செல்வராகவன்.? பல வருடம் கழித்து இணைந்த கூட்டணியாச்சே…

நடிகர் தனுஷ் தனது சகோதரரான இயக்குனர் செல்வராகனுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் நானே வருவேன். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்த புதுப்பேட்டை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இந்துஜா மற்றும் எல்லி அவ்ராம் ஆகிய இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது அதில் நடிகர் தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார் மேலும் தனுஷின் சகோதரர் இயக்குனர் செல்வராகவன் முதன் முதலாக தனுஷ் உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

பின்னர் நானே வருவேன் திரைப்படத்தில் தனுசுக்கு வில்லனாக களம் இறங்குகிரார செல்வ ராகவன் என்று கேள்வி ரசிகர்களிடையே எழும்பியுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் இதுவரையிலும் நடிக்காத கதாபாத்திரத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் படம் இரண்டு வெவ்வேறு காலங்கட்டங்களில் அமைக்கப்பட உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் நடிகர் தனுஷும் இயக்குனர் செல்வராகவும் இந்த படத்தில் ஒருவரை ஒருவர் மோத மாட்டார்கள் என்று தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும் நானே வருவேன் திரைப்படம் குறித்து விரைவில் படக்குழு அறிவிப்பை வெளியிடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் , இயக்குனர் செல்வராகவன் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூன்று பெரும் புதுபேட்டை திரைப்படத்தில் ஒன்றாகவே பனி  புரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இணைந்து உள்ளது.

Leave a Comment