திரில்லரில் மிரட்டும் நானே வருவேன் திரை விமர்சனம்.! தனுஷ் செல்வராகவன் கூட்டணி வெற்றி பெற்றதா.?

0
dhanush nane varuven review
dhanush nane varuven review

நடிகர் தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் நீண்ட காலம் கழித்து நடித்துள்ள திரைப்படம் தான் நானே வருவேன் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். இவர்கள் மூவரும் நீண்ட காலங்களுக்கு பிறகு இணையும் இந்த திரைப்படம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்ததா இல்லையா  என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

தனுஷ் இந்த திரைப்படத்தில் இரட்டையாளர்களாக நடித்துள்ளார்கள். தனுஷ் ஒரே வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறக்கிறார்கள். அதற்கு ஒரு தனுஷ் பெயர் பிரபுவும் மற்றொரு தனுஷ் பெயர் கதிர். கதிர் வழக்கமாக இருக்கும் சிறு பிள்ளையாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார். இதனால் தனுஷின் பெற்றோர்கள் திடீரென அவசர முடிவு எடுத்து விடுகிறார்கள்.

கதிர் தனுசை ஒரு கோவிலில் விட்டு விட்டு தனுஷ் பிரபுவை மட்டும் எடுத்துச் சென்று வளர்கிறார்கள் பின்பு தனுஷ் பிரபு வளர்ந்து அழகான மனைவி அன்பான மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அங்கு தான் பிரபு தனுஷிற்கு மிகப்பெரிய பிரச்சனை ஆரம்பிக்கிறது அதாவது தன்னுடைய மகள் தனியாக பேசுகிறார் அதை பார்த்த தனுஷ் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு வழியாக மகளுக்கு பேய் பிடித்துள்ளதை கண்டுபிடிக்கிறார்.

அந்த ஆவியிடம் தனுஷ் பேச முயற்சி செய்கிறார் அப்பொழுது அந்த பேய் ஒரு கோரிக்கை வைக்கிறது அதை செய்தால் தான் உன் மகளை விட்டு போவேன் என கூறுகிறது வேறு வழியே இல்லாமல் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனுஷும் அதை செய்யத் துணிகிறார் பின்பு அந்த ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா தன்னுடைய மகளை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் பிரபு தனுஷ் மிகவும் சாந்தமாக இருக்கிறார் தன் மகளுக்கு ஆவி பிடித்திருப்பதை பார்த்து மிகவும் கஷ்டப்படுகிறார் அப்பொழுது நமக்கு பரிதாபம் வருகிறது மறுபக்கம் தனுஷ் கதிர் கொடூர வில்லனாக மிரட்டி வருகிறார் தன்னிடம் வம்பு இழுத்தவர்களை அப்பொழுது விட்டு விட்டு தன்னுடைய மகன் முன் அமைதியாக இருந்துவிட்டு   இரவு நேரத்தில் வம்பு இழுத்தவர்களை வேட்டையாடுகிறார்.

படத்தின் இடைவெளி காட்சியில் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கத் தோணுகிறது அந்த அளவு மிகவும் பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார்கள் முதல் பாதியை,  இரண்டாம் பாதி கதை என்பதால் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோன்றும் ஆனாலும் வில்லனாக மிரட்டும் தனுஷ் இரண்டாம் பாதியை தாங்கி செல்கிறார். தன்னுடைய அசுரத்தன  நடிப்பால் தனுஷ் ஒட்டுமொத்த  படத்தையும் ஒன் மேன் ஆர்மியாக தனுஷ் சுமந்து செல்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ஒளிப்பதிவு மற்றும் யுவனின் இசை தான்.

ஒளிப்பதிவில் மிரட்டி உள்ளார் ஓம் பிரகாஷ் அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பின்னணிசையும் யுவன் சங்கர் ராஜா இசையால் மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இடைவெளி காட்சியில் பேயை கண்டுபிடிக்கும் இடத்தில் மொத்த பார்வையாளர்களையும் இசையால்  உறைய வைத்துவிட்டார் யுவன். பொதுவாக செல்வராகவன் திரைப்படம் என்றாலே வசனம் பேசப்படும் ஆனால் இதில் அவ்வளவாக வசனம் பெரிதாக இல்லை படம் முழுவதும் விசுவலாக காண்பித்து விட்டார்கள். படத்தில் ஓம் பிரகாஷ் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

மொத்தத்தில் தனுஷ் மீண்டும் வெற்றி கொடியை பரக்கவிட்டுவிட்டார்.. ரசிகர் கொண்டாடும் திரைப்படமாக நானே வருவேன் திரைப்படம் அமைந்துள்ளது.