சென்னை நந்தனம் அருகே 2 பெண்கள் ஸ்பாட் அவுட்.! உயிருக்கு போராடும் இளைஞன்

0

சமீப காலமாக இருசக்கர வாகன விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை பார்க்கிறோம், இதற்கு காரணம் போக்குவரத்து விதிகளை மீறுவதே என்று பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பிரபல தனியார் கம்பெனியில் பணியாற்றி வருபவர் பவானி மற்றும் நாகலட்சுமி இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர்கள் இருவருடன் சிவா என்பவரும் பணியாற்றிவந்தார் இந்த நிலையில் இவர்கள் மூவரும் வேலைக்கு செல்வதற்காக ஒரே பைக்கில் சென்றுள்ளார்கள் அந்த சமயத்தில் பாரிசிலிருந்து வந்து கொண்டிருந்த பஸ்ஸின் பின்னால் பைக் மோதியது அப்பொழுது கண்ட்ரோல் செய்ய முடியாமல் மூன்று பேரும் கீழே விழுந்தார்கள்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பவானி நாகலட்சுமி இருவரும் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவா என்ற இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்த சம்பவம் நடந்தது நந்தனம் பகுதியில், அங்கு எப்போதும் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்,

போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், அதேபோல் இறந்த இரண்டு பெண்களும்  வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது, இந்த நிலையில் ஹெல்மெட் போட்டு இருந்தால் இவர்கள் உயிர் தப்பித்திருக்கும் என போலீசார் கூறி வருகிறார்கள்.