நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி.!வீடியோ உள்ளே

0

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியாக எத்தனை படம் நம்ம வீட்டுப் பிள்ளை, இது திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடித்திருந்தார். துவண்டு கிடந்த சிவகார்த்திகேயனை தூக்கி நிறுத்திய திரைப்படம் என்றும் கூறலாம் இந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம்.

சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் இதுவரை வந்த சிவகார்த்திகேயன் திரைப்படத்திலேயே தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. தற்பொழுது பழைய நடிகர்கள் நடித்து வந்த கதைகளை மீண்டும் தூசி தட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கிறார்கள் அதனால் இவரின் நடிப்பிற்கு அனைவரும் ரசிகர்கள்.

தற்பொழுது ஆபாச காட்சிகள் இல்லாமலும் சிறுவர்களை கெடுக்கும் விஷயம் சினிமாவில் இல்லாமலும் நல்ல படங்களை தந்து வருகிறார் சிவகார்த்திகேயன், இந்த நிலையில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.