நம்ம வீட்டுப் பிள்ளை திரைவிமர்சனம்.!

0
nvpstill
nvpstill

தமிழ் சினிமாவில் சமீப காலமாக குடும்பப்பாங்கான திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என அனைவரும் அறிந்ததுதான், அதேபோல் இன்று குடும்ப செண்டிமெண்டை வைத்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி பெற்றதா என்பதை பார்ப்போம்.

படத்தின் கதை.

பாண்டிராஜ் இயக்கும் திரைப்படம் என்றாலே குடும்பப் படமாக தான் இருக்கும் அதே போல் குடும்பத்துடன் பார்க்கும்படி அந்த திரைப்படம் அமைந்துவிடும். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் மிகப் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர், இவர் குடும்பத்தில் எந்த ஒரு நல்லது நடந்தாலும் முதல் ஆளாக நின்று அனைத்து நல்லது கெட்டது களையும் பார்ப்பவர்.

ஆனால் இவருக்கு அப்பா இல்லை என்பதால் இவரை யாரும் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள் அதே போல் அவரின் தங்கையாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரையும் உறவினர்கள் அனைவரும் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். சிவகார்த்திகேயன் ஆசை தனது தங்கைக்கு மிகப் பெரிய இடத்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான்.

தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஊர் முழுவதும் அலைந்து திரிந்து மாப்பிள்ளை தேடுகிறார் ஆனால் யாரும் கட்டிக் கொள்ள முன் வராமல் இருக்கிறார்கள் ஆனால் ஒருவர் மட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார், அது வேறு யாருமில்லை நட்டி தான், அவர்கள் திருமணம் செய்ய முன்வருகிறார், ஆனால் அவர் முன் வருவது தனது பகையைத் தீர்த்துக்கொள்ள என்பது சிவகார்த்திகேயனுக்கு தெரியவில்லை.

தனது பகையைத் தீர்த்துக் கொள்ள முன்வருவது சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் தனது தங்கையை கட்டிக் கொடுக்கிறார், ஆனால் தனது தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இறங்கி போகிறார், கடைசியில் என்ன ஆனது இந்த பாசப் போராட்டம் என்பது மீதிக்கதை.

படத்தைப்பற்றி

சிவகார்த்திகேயன் ரூட் இதுதான் என்ற அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், சிவகார்த்திகேயன் எப்பொழுதும் பெண்களை கேலி செய்வதும் கிண்டலடிப்பது வீட்டிற்கு அடங்காத பையனாக நடிப்பதும் இருந்து வந்தது ஆனால் இந்த திரைப்படத்தில் பொறுப்பான பையன் ஆகவும் அண்ணனாக, நல்ல மச்சான் ஆக நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் சொந்த அனுபவத்தை சிறிது கொடுத்துள்ளார் அதனால் படம் பார்ப்பவரை கண் கலங்க வைக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எந்த ஒரு நடிகையும் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும்பொழுது முன்னணி ஹீரோவுக்கு தங்கையாக நடிக்க மறுத்து விடுவார்கள் ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் பாரதிராஜா, அர்ச்சனா, சூரி என அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்,

பாண்டிராஜ் படம் என்றாலே ஒரு சில கதாபாத்திரம் போகிற போக்கில் நல்லது செய்துவிட்டு செல்லும். அதுவும் க்ளிக் ஆகும், அந்த கதாபாத்திரத்தை இதில் சூரியின் மகனாக வரும் பாண்டிராஜின் ரியல் லைப் மகன் செய்கின்றார். முந்திரிகுட்டை என்ற கதாபாத்திரத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் வசனத்திற்கு ஒரு சில இடங்களில் சூரி வசனத்தை விட க்ளாப்ஸ் அள்ளுகிறது.

எப்படியும் இவர் படம் என்றாலே செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், இந்த படத்தில் செண்டி மெண்ட் காட்சிகள் படம் முழுவதுமே உள்ளது, குறைந்தது 5 இடத்திலாவது அழ வைத்துவிடுவார், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் இன்னுமா என்று இரண்டாம் பாதியில் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.

ஆனால் படத்தின் கதை இதுதான் என மிக விரைவாக யூகிக்க முடிகிறது, படத்தில் இதுதான் நடக்கப் போகிறது என்பதை நாமே யூகிக்க முடிகிறது, அதுமட்டுமில்லாமல் படத்தில் தேவையில்லாமல் பாடலை சேர்க்க வேண்டும் என்பதற்காக சேர்த்துள்ளார்கள் அந்த காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகளை மிக அழகாக அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார். டி.இமானும் தன் பங்கிற்கு கிராமிய இசை மற்றும் அவருடைய டெம்ப்ளேட் சில இசைகளை சேர்த்து ஸ்கோர் செய்துவிட்டார். மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப்பிள்ளை, சிவகார்த்திகேயனின் மாஸ் கம்பேக்.

நம்ம வீட்டு பிள்ளை : 2.75/5