பிரமாண்ட படத்தின் வசூலுக்கு செக் வைக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் தேதி இதோ.!

0

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்த நடிகர், சமீபகாலமாக இவருக்கு சரியான ஹிட் திரைப்படங்கள் அமையவில்லை, அதனால் ஒரு ஹிட் திரைப்படம் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். அதனால் தற்போது தனக்கு கிராமத்தின் கதை தான் கரெக்ட் என எண்ணி மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு நம்ம வீட்டுப் பிள்ளை எனப் பெயர் வைத்துள்ளார்கள், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது, மேலும் இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் படத்தை  செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், அதற்கு முந்தைய வாரம் தான் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது அதனால் காப்பான் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.