புதிய அவதாரம் எடுத்த நமீதா!! போட்டி போடும் இயக்குனர்கள்!!காரணம் இதுதான்…

namitha started her new career in cinefield: சினிமா துறையில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு குறைந்ததால் அதற்கு அடுத்து ஏதாவது ஒரு வேலையை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சிலர் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விடுவர், மேலும் சிலர் இயக்குனர், தயாரிப்பாளர் என ஏதாவது ஒரு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

அந்தவகையில் தற்போது நடிகை நமீதா திரையுலகில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க உள்ளார். நமிதா தயாரிக்கும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த  திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி 9:30 திருவனந்தபுரத்தில் வெளியாகும் என கூறி உளளார்.

நடிகை நமிதா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்எஸ் ரவி மற்றும் மாத்யூ ஸ்கேரீயா நடிக்கவுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியிருக்கிறார்.

மேலும் இதனை அறிந்த நடிகர், நடிகைகள்,தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் நடிகை நமீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதோடு ரசிகர்கள் சிலர் இதற்கு மேல் உங்களை சினிமாவில் பார்க்க முடியாதா என வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment