பிக் பாஸ் வீட்டில் நமிதாவிற்கு அடி உதை.. காயங்களுடன் வெளியேறி மருத்துவமனையில் அனுமதியா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

0
namitha-marimuthu
namitha-marimuthu

பிக்பாஸ் வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து காயங்களுடன் வெளியே வந்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு சண்டையை மூட்டிவிட்டு வாக்குவாதம் நடைபெற்ற பிறகு அதை வைத்து டிஆர்பியை ஏற்றிக்கொள்வதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மையக்கரு என  பலரும் கூறி வருகிறார்கள்.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கியது இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவர்தான் நமிதா மாரிமுத்து இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார் அதற்கு காரணம் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி இடையே ஏற்பட்ட சண்டை என கூறப்படுகிறது.

ஒரே நைட்டில் மிகப்பெரிய பிரபலமானவர் நமிதா மாரிமுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கையாக கலந்து கொண்டார். இவர் சிறுவயதில் பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும், உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதையும் கூறி ஒரே இரவில் மிகவும் பிரபலமாகி விட்டார். நமிதாவின் கதை ஒட்டு மொத்த ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களும் அழுதார்கள்.

இந்தநிலையில் நமிதாவின் கதையை கேட்டால் நெட்டிசன்கள் இந்த சீசனில் டைட்டில் வின்னர் நமீதா தான் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள் அந்தளவு சந்தோஷம் அடைவதற்குள் அதிரடியாக நமிதா மாரிமுத்து அவராகவே வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது. நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறினார் என்று பிக்பாஸ் வாய்ஸ் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது ஆனால் எதற்காக வெளியேறினார் என்ற காரணம் மட்டும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் பிக் பாஸ் வீட்டில் நமீதாவுக்கு கொரோனா வந்ததாகவும் அதனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் திடீரென வெளியேற்ற பட்டதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தகவல் வைரலாகியது ஆனால் கொரோனா வந்தால் போட்டியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியை நிறுத்தப்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் அனைவரும்.

ஆனால் வீட்டில் நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி க்கும் நமிதாமாரிமுத்துக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் நமிதா மாரிமுத்து வெளியேறுவதற்கு காரணம் எனவும். இதில் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபோது காயங்களுடன் வெளியேறினார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றால் ஒப்பந்தம் செய்யப்பட்டு தான் கண்டிஷன் போட்டு தான் உள்ளே அனுப்புவார்கள். நமிதா மாரிமுத்து அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டாலும் இதுவரை எந்த ஒரு போலீஸ் புகாரும் அளிக்கப்படவில்லை காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிக்பாஸ் குழு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நமீதாவுடன் சுமூக பேச்சுவார்த்தையை பிக்பாஸ் குழு நடத்தியதன் பெயரில் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு புகாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

நமிதா மாரிமுத்து விற்கு பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது அவர் வெளியே கூறினால் மட்டுமே தெரிய வரும். சிகிச்சை முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் நமிதா மாரிமுத்து செல்வாரா.? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.