பிக் பாஸ் வீட்டில் நமிதா சொன்னது எல்லாமே…? முதல் பேட்டியில் பகிரங்கமாக கதறி அழுத நமிதாவின் அப்பா அம்மா.!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்து வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனை விஜய் தொலைக்காட்சி வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள் இந்த நிகழ்ச்சி கடந்த மூன்றாம் தேதி ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அந்த வகையில் நமிதா மாரிமுத்துவும் ஒருவர்.

ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டில் தனது சோகக் கதையைக் கூறி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தார்கள் அந்தவகையில் நமீதாவும் தனக்கு நடந்த துயரத்தை பகிரங்கமாக அனைவரின் முன்பும் கூறி அனைவரையும் கண்ணீரில் மிதக்க வைத்தார். அவர் அதில் கூறியதாவது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை அதன் பிறகு போகப் போக தனது உடலில் பல வித்தியாசங்களை உணர்ந்தேன்.

பத்து வயதிற்கு மேல் தனது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டினேன் அதேபோல் பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என ஆசை வந்தது. எங்க வீட்டில் யாருக்காவது குறை இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்களே தவிர என்னை ஏற்றுக் கொள்ள மிகவும் தயங்கினார்கள் அதனால் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் அசிங்கப் படுத்தினார்கள்.

ஒருமுறை என்னுடைய அம்மாவும் அப்பாவும் எனது சாப்பாட்டில் எதையோ கலந்து வைத்தார்கள் நானும் சாப்பிட்டு விட்டேன் கண்விழித்து பார்த்தபோது நான் மருத்துவமனையில் இருந்தேன். அங்கு எனக்கு விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டினார்கள். பல கொடுமைகளைச் செய்தார்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். இந்த அனைத்து கொடுமைகளையும் சிறு வயதிலேயே நான் அனுபவித்து வந்தேன்.

அது மட்டும் இல்லாமல் சிறு வயதிலேயே மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டதாக நமிதா  கூறினார். இவர் பேசும்பொழுது ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் நிரம்பியது இந்த நிலையில் நமீதாவின் அப்பா மற்றும் அம்மா எமோஷனலாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள். அவர்கள் கூறியதாவது தன்னுடைய பெண்ணைப் பற்றி எல்லோரும் பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது.

நேற்று ஒளிபரப்பப்பட்டு வந்த அனைத்து எபிசோடு களையும் பார்த்தோம் அதை பார்த்து நாங்கள் மிகவும் கண்கலங்கினோம், அதில் நமீதா கூறியது அனைத்தும் உண்மைதான் இவ்வளவு கஷ்டங்களை எங்கள் பையன் நமிதாவுக்கு கொடுத்தது இப்பொழுது நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. அவள் சொன்னது அனைத்தும் உண்மைதான் அதில் எந்த மாற்றமும் இல்லை எங்களுடைய குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம் அதனால் எங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் எங்களை ஒதுக்கி வைத்தார்கள்.

அதற்காக எங்களுடைய பிள்ளையை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென மருத்துவரை அணுகினோம் அதனால்தான் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து ஹாஸ்பிடல் கொண்டு சென்றோம். இப்பொழுது பையனாக இருந்து பெண்ணாக மாறிய பின் எங்களது மகள் மிகவும் அழகாக இருக்கிறார் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆரம்பத்தில் தான் எங்களுக்கு வருத்தமாக இருந்தது அதன் பிறகு நாங்கள் அவளை போகப்போக புரிந்துகொண்டும். இப்பொழுது அவள் இருக்கும்  இந்த நிலைமையை நினைத்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது நாங்கள் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாமென தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற குழந்தைகளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்கள்.

Leave a Comment