நமீதா வெளியேறியதும் பிக்பாஸ் வீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்! ஒருவேளை இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாரோ

0
namitha-marimuthu
namitha-marimuthu

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் இந்த வருடம் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசன் கடந்த 3ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது இந்தத் நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார்.  நமிதா, வீட்டில் இருக்கும் ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பபட்டார் என கூறப்படுகிறது.

மேலும் நமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது தனக்கு ஏற்பட்ட துயரத்தையும் துன்பத்தையும் வெளியே கூறினார் அதில் அவர் சிறிய வயதிலேயே மனதளவிலும் உடலளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் கூறினார் அதுமட்டுமில்லாமல் அவருடைய அப்பா அம்மா இவளை ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் துன்புறுத்தியதாக கூறினார். அப்படியிருக்கும் நிலையில் பிக் பாஸ் கன்பேஷன்ரூமில்.

ஷகிலாவின் திருநங்கை மகள் மிலா அமர்ந்திருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதை கண்ட ரசிகர்கள் நமிதாவிற்கு பதிலாக இவர் உள்ளே செல்ல போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது ஆனால் இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் மிலா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது ஒருவேளை அது போல் இவரும் கலந்து கொள்ள இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த புகைப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என பலரும் கூறி வருகிறார்கள் பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்க்க சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தகவல் கிடைத்துள்ளது.

mila
mila