அமேசான் நெட்ப்ளிக்ஸ் OTT இணையதளத்தை யே அதிர விடப் போகும் நமீதா.!

namitha
namitha

தல அஜித் மற்றும் விஜய்  பட நடிகை ஒருவர் சொந்தமாக OTT தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தனது OTT தளம் பற்றிய பல விஷயங்களை கூரிய வீடியோவாக வெளியிட்டு உள்ளார். தற்பொழுது இந்த தகவல் தான் இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

அந்த வகையில்  90 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் நடிகை நமிதா.  இவர் கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் இவரால் முன்னணி நடிகையாக நடிக்க முடிந்த பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு சில காலங்கள் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நமிதா தல அஜித்துடன் இணைந்து பில்லா மற்றும் தளபதி விஜயுடன் இணைந்து அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் தற்பொழுது நமிதா சொந்தமாக நமிதா தியேட்டர் என்ற OTT தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த OTT தளத்திற்கு ரவி வர்மா என்பவர் மேனேஜிங் டைரக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார். ரவிவர்மா இதற்கு முன்பு பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ கோர்ஸ் படித்தவர் ஆவார்.  அதன்பிறகு பல்வேறு கார்பெட் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.

 

எனவே இவரின் ஆலோசனைப்படி தான் இந்த ஓடிடி இயங்க உள்ளது. இந்த ஓடிடி தளத்தில் உண்மை கதைகளை மையமாக வைத்து இயக்கப்படும் குறும்படங்கள் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார் நமீதா. அதோடு புதிதாக அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு இந்த OTT தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். அந்தவகையில் விரைவில் இந்த  OTT தளத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.