தமிழ்சினிமாவில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நமிதா இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார், தமிழில் முதல்முறையாக எங்கள்அண்ணா என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன் பிறகு ஏய், இங்கிலீஷ்காரன் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக இவர் தமிழில் இளமை ஊஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தனது காதலர் விரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார்.
இவர் தமிழில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார், ஆனால் கடந்த சில வருடங்களாகவே இவருக்கு பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் தனியார் தொலைக்காட்சியில் நடுவராக பங்கேற்றார். அதேபோல் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

தற்பொழுது இவருக்கு ‘அகம்பாவம்’ என்ற புதிய படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது மகேஷ் இயக்கும் இந்த திரைப்படத்தில் படத்தின் தயாரிப்பாளர் வாராகி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் என பலரும் நடிக்கிறார்கள், இந்த படத்திற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார் நமிதா.

உடல் எடையை குறைத்த பிறகு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.