தனது மனைவியை கட்டிபிடித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நகுல்.! வைரலாகும் புகைப்படம்

0
nakkul

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பாய்ஸ் இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது, அதேபோல் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது படத்தில் பரத், மணிகண்டன், சித்தார்த் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள் அதேபோல் நடிகர் நகுல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பாய்ஸ் படத்தில் நடித்ததற்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார், பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டாக இருந்த நகுல் அதிரடியாக gym வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார், இவர் திடீரென உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உடல் எடையை குறைத்த பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், நகுல் தேவயானியின் சகோதரர் ஆவார், இவரின் மனைவியை யாருக்கும் அந்த அளவு தெரியாது, தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவர் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கிறது என நிலையில் இவரின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார், இதோ அதன் புகைப்படம்

nakul
nakul