என் அம்மாவை தவறாக பேசாதீர்கள் மேடையில் உருக்கமாக பேட்டியளித்த மீனாவின் மகள் நைனிகா.! ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்களை கண்கலங்க வைத்த தருணம்..

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, விக்ரம், விஜய் என பல ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது வரையிலும் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகை மீனா. இவர் வயதான காரணத்தினால் ஹீரோயினாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருடைய மார்க்கெட் மக்கள் மத்தியில் குறையாமல் இருந்து வருகிறது.

மேலும் சினிமாவில் ஒரு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மீனா தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலைக்குறைவால் காலமானார். எனவே இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் மீனாவை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக அவருடைய தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்பொழுது பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு 40 ஆண்டுகளாக சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வரும் மீனாவிற்காக சமீபத்தில் ‘மீனா 40’என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார், ரஜினி காந்த், சரத்குமார், மோனிகாபூர், பிரசன்னா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்துக் கொண்டனர். பலரும் மீனாவை பற்றி மிகவும் பெருமையாக பேச நிலையில் அப்பொழுது மீனாவின் மகள் நைனிகா தன்னுடைய அம்மாவை ஊடகங்களில் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகவும் ஆக்ரோஷமாக பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சினிமாவை பொருத்தவரை கிசுகிசுகள் இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் 40 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படி மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினவும் கலக்கி வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சில ஊடகங்களில் அம்மாவை பற்றி தவறாக பேசுகிறார்கள் தயவு செய்து இப்படி பேச வேண்டாம் அவர் நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு ஹியூமன் தான்.

அப்பா இறந்தபோது அம்மா தனியாக அழுவார்கள். எனக்கு தெரியாமல் அழுது கொண்டே இருப்பார்கள் அதை நான் பார்த்து என்னால் என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தற்பொழுது தான் ஓரளவுக்கு நன்றாக இருந்து வருகிறார்கள் யாரும் என் அம்மாவை தவறாக பேச வேண்டாம் ப்ளீஸ் நான் அம்மாவிடம் பயப்பட வேண்டாம். அம்மா நான் இருக்கிறேன் நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். என்னால் இப்பொழுது முடியவில்லை என்றாலும் வளர்த்த உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்று மீனாவிடம் நைனிகா மிகவும் உருக்கமாக கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் பேசுவதை பார்த்து ரஜினி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கண்கலங்கி உள்ளனர்.

Leave a Comment