தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறர்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் இவரின் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளார்கள் இதில் நயன்தாராவை விடவும் சமந்தாவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வருகிறது.
ஆனால் இத்திரைப்படத்தில் கொஞ்சம் கிளாமராகவும் டபுள் மீனிங் வசனமும் பேசுவதால் சமந்தாவின் மீது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று சமந்தாவிற்கு பிறந்த நாள் என்பதால் ஒட்டுமொத்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வந்தார்கள்.
அந்த வகையில் நடிகரும் சமந்தாவின் முன்னாள் காதலரான நாக சைதன்யா நேற்றைய சமந்தா பிறந்த நாள் அன்று ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். நாகசைதன்யா நடித்தவரும் வெப் சீரியல் பற்றிய அறிவிப்பு வெளிவந்த நிலையில் அமேசான் ப்ரைமில் இந்தியா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது நாகசைதன்யா நடித்திருக்கும் வெப் சீரியல் லான்ச் செய்யப்பட்டது. திகில் கதையம்சம் நிறைந்த இந்த வெப் சீரியலின் பெயர் தூதா. நாக சைதன்யா மற்றும் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி திருவொத்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இதனை தொடர்ந்து விக்ரம். கே.குமார் இயக்கி தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
#DhoothaOnPrime: In this supernatural horror, possessed inanimate objects wreak havoc on the lives of people who commit deadly sins.#PrimeVideoPresentsIndia #SeeWhereItTakesYou pic.twitter.com/7lNDbdpTER
— prime video IN (@PrimeVideoIN) April 28, 2022