நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்தது.! சேதங்கள் மட்டும் எவ்வளவு தெரியுமா.? வீடியோ உள்ளே

nadigarsangam
nadigarsangam

சென்னை தி நகரில் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது, இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ விபத்து நடிகர் சங்க அலுவலகத்தில் ஏற்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது அந்த பகுதியில்.

நடிகர் சங்க அலுவலகத்தில் கிச்சன் பகுதியில் 4 மணிக்கு முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த தீ மளமளவென பரவி அலுவலகம் முழுவதும் பற்றி எரிந்தது தகவல் வெளியாகியுள்ளது.

nadigarsangam
nadigarsangam

இந்த தகவல் தீயணைப்புத் துறையினருக்கு சென்றதால் தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

nadigarsangam
nadigarsangam

இந்த தீ விபத்தில் நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்துள்ளது என கூறப்படுகிறது.

nadigarsangam
nadigarsangam

அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கம் தற்பொழுது தமிழக அரசு நியமனம் செய்த தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.