நாச்சியார் படத்துல முதன் முதலில் ஜி.வி. பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்தது இவர் தான்.! பாலா சாய்ஸ்..

0

திரை உலகில் இருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களை இயக்கி வெற்றி கண்டு அடுத்த அடுத்த லெவலுக்கு செல்வார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை வெளிக்காட்ட நினைப்பவர்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொண்டே அவ்வப்போது வித்தியாசமான படங்களை இயக்கி சினிமாவில் இருக்க இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இயக்குனர் பாலா.

அந்தவகையில் இவர் இயக்கிய வித்தியாசமான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதால் தற்போது டாப் இயக்குனர்களில் இவரும் சேர்ந்து உள்ளார். இருப்பினும் இவரைப்பற்றிய அப்பொழுது அவதூறான செய்திகள் வெளிவருகின்றன ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வித்தியாசமான படங்களை கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்.

அந்த வகையில் தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு இவர் ஜோதிகா ஜிவி பிரகாஷ் ஆகியோரை வைத்து “நாச்சியார்” என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது விட ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது அதுபோல ஜிவி பிரகாஷ் அதுவும் இந்த படமும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் அபாரமான நடிப்பு வேற லெவல் இருந்தது இப்படத்தில் சோகம், ஏமாற்றம், காமெடி, காதல், தனிமை அனைத்து விதமான ரோலில் திறம்பட நடித்து பாலாவிடம் நல்ல பெயரை சம்பாதித்தார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் ஜிவி பிரகாஷ்க்கு முன்பாக ஸ்ரீ என்பவரை தான் பாலா யோசித்து வைத்திருந்தாராம்.

ஸ்ரீ இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18\ 9 என்ற திரைப்பட நடித்து இருந்தார். அதன்பிறகு இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் போன்ற பல்வேறு படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அசத்தியிருந்தார் அதன் விளைவாகவே பாலா அந்த ரோலுக்கு முதன் முதலாக ஸ்ரீ என்பவரை தான் தேர்வு செய்திருந்தார்.