வசூலில் மரண அடி வாங்கிய தனுஷின் “நானே வருவேன்” படம் – 5 நாள் முடிவில் அள்ளிய மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் தனுஷ் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனே நானே வருவேன் படத்தையும் ரிலீஸ் செய்தார்.

இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் கலை புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்தார் இந்த படம் முழுக்க முழுக்க அப்பா – மகள் சென்டிமென்ட் படமாக உருவாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷ்  ஹீரோ – வில்லன் என இரண்டை கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

இவருடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு செல்வராகவன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஆரம்பத்தில் நல்ல வசூலை அள்ளியது.

வருகின்ற நாட்களில் இந்த படத்தில் வசூல் அதிகரிக்கும்.. என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வம் படம் ரிலீஸ் ஆகி நானே வருவேன் படத்திற்கு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டது நானே வருவேன் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் குறைந்த வசூலை அள்ளி உள்ளது இந்த படம்  ஐந்து நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது..

என்பதை குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்கையில் நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் 5 நாள் முடிவில் உலகளவில் 22 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இதை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை..

Leave a Comment