மக்கள் அனைவருக்கும் காமெடி என்றாலே முதலில் மனதிற்கு வருவது வைகை புயல் வடிவேலு தான். அந்த அளவிற்கு அவரது டைமிங் காமெடி ரியாக்ஷன்கள் அனைத்தும் ரசிகர்களை என்டர்டைமென்ட் செய்துள்ளது. தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு..
ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வந்தார் அந்த படங்களும் அவருக்கு வெற்றியை பெற்று தந்தது. இடையில் சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது அதில் அதிகம் காமெடி பஞ்ச் டயலாக் போன்றவை இடம் பெற்றுள்ளது அதற்கு முக்கிய காரணம் வடிவேலுவுடன் இணைந்து வளர்ந்து வரும் காமெடி நடிகர்களான ரெடின் கிங்ஸ்லி, ராமர் போன்ற சிலரும் நடித்துள்ளனர்.
மேலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஹீரோயினாக சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் பிரபலமும் ஆனா ஷிவானி நாராயணன் நடித்துள்ளார். இது போக மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் ஷிவானி நாராயணன் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் கிளாமரில் புகுந்து விளையாடும் ஷிவானி நாராயணன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் கிளாமருக்கு குறை வைக்காமல் நீச்சல் உடையில் நடித்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது ஷிவானி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர்.