நாய் சேகரில் பழைய வடிவேலாக மிரட்டினாரா இதோ திரை விமர்சனம்.!

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நாய் சேகர் ரிட்டன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வடிவேலு தான் விட்ட இடத்தை  பிடிக்க நினைக்கிறார் வடிவேலு ரசிகர்களின்  ரசனைக்கேற்ப நகைச்சுவைகளைக் கொடுப்பாரா என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் பார்த்துவிடலாம்.

நடிகர் வடிவேலு பணக்காரர்களிடமிருந்து நாய்களை கடத்தி பணம் பறிக்க நினைக்கிறார்  அப்படிதான் ஒரு குழுவினரிடமிருந்து நாயை கடத்திக் கொண்டு வந்து அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு பெருந்தொகை தர வேண்டும் என கேட்கிறார். ஆனால் வடிவேலு கடத்தியது வேறு ஒருவரின் நாய்  சிறு வயதில் தான் தொலைத்த நாயை தேடி நாய் சேகர் கிளம்பி விடுகிறார் அந்த நாய் யாரிடம் இருக்கிறது எங்கு இருக்கிறது என்பதை மிகவும் அழகாக நகைச்சுவையாககூறியுள்ளார்.

நாயை கடத்தும் வடிவேலு டீமில் நடித்திருக்கும் ரெடீம் கிங்ஸ்லி youtube பிரசாந்த் ஆகியோர்கள் நடித்துள்ளது ரசிகர்களுடைய ரசிக்க வைத்துள்ளது குறிப்பாக இவர்கள் இருவரும் மற்றொரு ரவுடியான ஆனந்தராஜ் அவர்களிடம் அடி வாங்கும் காட்சிகள் திரையரங்கில் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ஒரு காலகட்டத்தில்  மிகவும் கொடூர வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் ஆனந்த்ராஜ் கொஞ்சம் காமெடியில் கலக்கியுள்ளார்  அதனால் அவர் நடிப்பு இயல்பாகவே சிரிப்பை உண்டாக்கியுள்ளது. அவரது குழுவில் இடம் பெற்றுள்ள லொள்ளு சபா ஷெஷி என்னமா ராமர் ஆகியவர்கள் தங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களை மிகவும் சரியாக பயன்படுத்தி நகைச்சுவை கொடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் ராவ் ரமேஷ், முனீஸ் காந்த் ,மனோபாலா, வெங்கட் ராவ் ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியான முறையில் நடித்துள்ளார்கள் படத்தில் முதல் பாதியின் இறுதி நிமிடங்களிலும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆள்களை கடத்தியே எடுக்கப்பட்ட கதைகள் இருந்தாலும் முதன்முறையாக நாய்களை கடத்தினால் எப்படி இருக்கும் என்ற புது கருவுடன் இயக்குனர் சுராஜ்  இயக்கி இருந்தாலும் படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் சளிர்ப்பை   தட்டுகிறது.

மேலும் சந்தோஷநாராயணனின் பின்னணி இசை பாடல்கள் என  படத்தின் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக நீண்ட காலம் சினிமாவில் இல்லாத வடிவேலு மீண்டும் தன்னுடைய இடத்தை தன்னுடைய காமெடியால் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் நகைச்சுவை பாடி லாங்குவேஜ் என அனைத்தும் அப்படியே இருக்கிறது இந்த நிலையில் புது புது பானி காட்டும் பழைய வடிவேலுவை இனி காணவே முடியாதோ என்ற  எண்ணம் தோன்றுகிறது.

மொத்தத்தில் சீரியஸான நகைச்சுவை இல்லை என்றாலும் சிம்பிளான நகைச்சுவை இடம் பெற்றுள்ளது.

Leave a Comment