காமெடி என்றாலே நம் நினைவிற்கு வருவது வைகைபுயல் வடிவேலு தான் ஏனென்றால் இவர் பேசிய பல வசனங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பதிந்து காணப்படுகிறது மேலும் இவரது எக்ஸ்பிரஷன் பாடி லாங்குவேஜ் போன்ற அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
பல டாப் ஹீரோக்களுடன் படங்களில் இணைந்து காமெடியனாக பணியாற்றி வந்த வடிவேலு. ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி போன்ற சில படங்களை கொடுத்து வந்தார் அந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இப்படி இருக்க சில காரணங்களால் சினிமாவில் கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்த வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி உள்ளார்.
படத்தில் வடிவேலுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, kpy ராமர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சிவானி நாராயணன் போன்ற பலரும் நடித்துள்ளனர். படம் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க நாய்யை வைத்து அதிக காமெடிகள் இடம் பெற்றிருந்தது. அதனால் படம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வந்தன.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன அதன் படி 8 நாள் முடிவில் உலக அளவில் 7. 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து லைக்கா எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது