நாடோடிகள் 2 திரை விமர்சனம்.!

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடோடிகள் 2 பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தாண்டி திரைக்கு வந்துள்ளது. நாடோடிகள் முதல் பாகம்  வெற்றி பெற்றது போல் இரண்டாம் பாகமும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டைரக்டர் சமுத்திரக்கனியும் நடிகருமான சசிகுமாரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் இப்படம் வெளியாகியுள்ளது.

நாடோடிகள் 2 ஒரு உண்மைக் கதையை தழுவியது.இப்படத்தில் ஜாதிக்கு  எதிராக குரல் கொடுக்கும் ஒரு படமாவும் சமுதாய அக்கறை உள்ள ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முன்பே வரவேண்டியது ஆனால்  பல பிரச்சனைகளால் லேட்டாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும்,அஞ்சலி மற்றும் அதுல்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ரசிகர்களிடையே வெற்றி பெற்று உள்ளதா என்பதை கீழே காணலாம்.

படத்தின் கதை:

சசிகுமார் படத்தில் ஜாதி வெறி பிடித்த மக்களுக்கு எதிராகபோராடும் ஒரு மனிதனாக காணப்படுகிறார். இவருடன் சேர்ந்து அஞ்சலி மற்றும் பரணி இவர்களுடன் சேர்ந்து போராடுகின்றனர்.

போராளிகள் தான் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் அவர்கள் தன் போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறார் .சமூக பிரச்சினைக்காக போராடுவதால் தன் மாமாவும் மற்றும் ஊர் பொதுமக்களும் சசிகுமாருக்கு  பெண் தர மறுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்அதுல்யா பெற்றோர்கள் பெண் தருவதாக கூறுகிறார்கள்.

போராளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது ஹீரோவுக்கு அன்று இரவு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. என்னவென்றால் அதுல்யா குடும்பத்தினர் ஜாதி வெறி பிடித்தவர்கள் என தெரியவருகிறது. இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் படத்தின் மீதி  கதை.

சசிகுமார் தனது வழக்கமான நடிப்பை இதில் மெருகேற்றி உள்ளார் மற்றும் அஞ்சலி அதுல்யா ஆகியோர் நடிப்பு வரவேற்பதற்காக இருக்கிறது. மற்றும் எதார்த்தமான நடிப்பில் பரணி கலக்கியுள்ளார். சமுத்திரக்கனியின் வசனங்கள் கதைக்கு நிறைவேற்றுகின்றன. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் இரண்டாம் பாதியில் ஒளிப்பதிவு மற்றும் ஜஸ்டின் இசை நம்மளை பரபரப்பாக வைத்திருந்தது.

நாடோடிகள் மீண்டும் ஒரு தரமான படைப்பு.

நாடோடிகள் = 2.75/5

Leave a Comment