விஷாலுக்கு பாடம் புகட்ட மிஸ்கின் எடுத்த அதிரடி.! அஞ்சாதே 2 நடிகர் யார் தெரியுமா.?

0
anjathe-2-tamil360newz
anjathe-2-tamil360newz

anjathe 2 : இயக்குனர் மிஸ்கின் தமிழ்சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், மிஸ்கின் யார் என்று அவர் இயக்கிய திரைப்படத்திலேயே தெரியும், இதை அவரே பலமறை மேடையில் கூறியுள்ளார், இந்த நிலையில் மிஸ்கின் சைக்கோ திரைப்படத்தை தொடர்ந்து விஷாலை வைத்து துப்பறிவாளன்-2 திரைப்படத்தை இயக்கி வந்தார்.

ஆனால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார், மிஷ்கின் திரைப்படத்தில் இருந்து விலகியதால் துப்பறிவாளன் 2 மீதமுள்ள திரைப்படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார்.

இப்படி இருக்கும் நிலையில் மிஷ்கின் அடுத்ததாக அஞ்சாதே 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன, அஞ்சாதே 2 திரைப்படத்தில் முதன் முதலில் சிம்புவை தான் நடிக்க வைக்க மிஸ்கின் பிளான் போட்டார் ஆனால் சிம்பு கைவசம் தற்போது உள்ள திரைப்படத்தை நடித்து முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால்.

அஞ்சாதே 2 திரைப்படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போகும் நிலை இருக்கிறது அதனால் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம் மிஸ்கின், இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் என கூறுகிறார்கள்.

அஞ்சாதே முதல் பாகம் 2008ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்தது இந்த திரைப்படத்தில் பிரசன்னா, அஜ்மல் நரேன், விஜயலட்சுமி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். அதேபோல் இதன் இரண்டாம் பாகத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.