பிரபல நடிகரின் பேரன் தான் மைனா நந்தினியின் கணவர்.! இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.!

0

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சில சீரியல்கள் சில வருடங்களுக்கு முன்பு முடிந்திருந்தாலும் இன்று வரையிலும் அந்தச் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.

அந்த வகையில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து மூன்று சீசன்கள் ஒளிபரப்பானது.  அந்த வகையில் இரண்டாவது சீசனில் மூலம் மீனாட்சி கேரக்டரில் ரச்சிதா மஹாலக்ஷ்மி அறிமுகமானார்.

இவருக்கு தோழியாக மைனா கதாபாத்திரத்தில் நந்தினி அறிமுகமானார்.  இந்த சீரியல் நந்தினி மிகவும் அருமையாக நடித்ததால் மைனா என்ற கேரக்டர் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.  தற்பொழுது வரையிலும் பலருக்கு மைனா என்று சொன்னால் மட்டுமே தெரியும்.

இந்நிலையில் மைனா ஜிம் மாஸ்டர் ஒருவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜிம் மாஸ்டருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது.இதை மறைத்து நத்தினியை திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் முடிந்த சில காலங்களுக்குப் பிறகு தான் நந்தினிக்கு உண்மை தெரியவந்தது.

எனவே நந்தினி தனது வீட்டிற்கு வந்து விட்டார். பிறகு ஜிம் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.  இப்படிப்பட்ட நிலையில் பிரபல சீரியல் நடிகரானா யோகேஸ்வரன் நந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருவரும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில்  யோகேஸ்வரன் பழம்பெரும் நடிகரின் பேரன் ஆவார் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது.ஆம், சிவாஜி உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கலின் திரைப்படங்களில் நடித்திருந்த ராமதாஸ் தான் யோகேஸ்வரனின் தாத்தா.