கமலின் “விக்ரம்” படத்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகரின் படத்தில் இணைந்த மைனா நந்தினி – உறுதிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படம்.

maina nandhini

சின்னத்திரை நடிகைகள் சமீபகாலமாக வெள்ளித்திரையில் அடி எடுத்து வைக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அது போல தற்போதும் பிரபல சீரியல் நடிகை தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களின்  படங்களில் நடித்து வருகிறார்.

அந்த பிரபலம் வேறு யாருமல்ல விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்த அவர் நந்தினி. இந்த தொடரில் அவர் மைனா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அந்தப் பெயரை சேர்த்துக் கொண்டு தற்போது வலம் வருகிறாராம் மைனா நந்தினி தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் யோகேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகு இவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாறி உள்ளது விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணியாற்றி வருகிறார் ஏன் சமீபத்தில் கூட இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை இரண்டாவது சீசனில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் மைனா நந்தினி அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் என்ற தகவல் வெளியாகி நிலையில் இந்த திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமன்  திரைப்படத்திலும் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயின்னாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ கார்த்தி மற்றும் மைனா நந்தினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம்.

maina nandhini and karthi
maina nandhini and karthi