நடிகை மீனா சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க ஆரம்பித்தார் அதிலும் முதலில் எடுத்த உடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே வெற்றி படம்தான் அதனை தொடர்ந்து சினிமா உலகில் நடிகை மீனாவுக்கு மார்க்கெட் தாறுமாறாக எகிரி உள்ளன.
மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகரான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ஓடினர். தொடர்ந்து வெற்றியை மட்டுமே நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் 2009 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் அவர் பெயர் நைனிகா இவரும் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். சினிமா குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் நன்றாக போய்க் கொண்டிருந்த மீனா குடும்பத்திற்கு ஒரு கட்டத்தில் பிரச்சனை வர அதுவும் எப்படிப்பட்ட பிரச்சனை என்றால் மீனாவின் கணவர் வித்தியாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது.
இரண்டு நுரையீரல்களும் ரொம்ப பாதிப்படைந்தது இதனால் நுரையீரலை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு மீனாவும் குடும்பமும் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர் புறா எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால் நோய் இன்னும் அதிகரித்தது இதனால் ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் ஒன்னும் பண்ண முடியாது என கை விரித்து விட்டனர்.
பின் மீனாவின் கணவர் இறந்து போய்விட்டார் அவர் இறந்து தற்போது ஒரு மாசத்திற்கு மேல் ஆனது மீனவும் குடும்பமும் அதிலிருந்து மீள முடியாமல் தற்போது வரை சிக்கி தவித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இன்று உலக உறுப்பு தான நாளை முன்னிட்டு மீனாவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது ஒரு உயிரை காப்பாற்றுவதை விட வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது.
உயிரைக் காப்பாற்றும் அப்படி ஒரு உன்னதமான விஷயம்தான் உடல் உறுப்பு தானம் நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வரும் பலருக்கு மறுவாழ்வை கொடுக்கும் ஒரு வரம் அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவைத்து இருக்கிறேன். என்னுடைய கணவருக்கும் யாராவது அப்படி செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கும். உடல் உறுப்பு தானம் என்று உயிர்களை காப்பாற்றும் அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..
இது தானம் வழங்குபவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருக்கும் விஷயம் கிடையாது இது குடும்பம் நண்பர்கள் ஊரார் உறவினர்கள் போன்ற அனைவரும் சம்பந்தப்பட்டது இன்று நான் என்னுடைய உடலுறுப்பு தானம் செய்ய உறுதிமொழி எடுத்து இருக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு ஒரு அடையாளமாக இருக்கும் என கூறினார்.