தனுஷ் படமா என் பொண்ணு நடிக்க வர மாட்டாள்.? மாஸ் காட்டும் பிரபல தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த நடிகர் தனுஷ் அண்மைகாலமாக தெலுங்கு ஹிந்தி அதைத்தாண்டி ஹாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இதனால் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக மாறுகிறார்.

பெரும்பாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் தனுஷ் ஒரு சில நடிகைகளை முன்பு தேர்வு செய்து படக்குழுவிடம் சொல்லி விடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அது மாறன் திரைப்படத்தில் கூட நடந்து உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் இப்போது நானே வருவேன், வாத்தி போன்ற பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனால் நாளுக்கு நாள் தனுஷின் மார்கெட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அதனால் தனுஷுடன் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என பல நடிகைகளும் கணக்கு போட்டு நடிக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார் பிரபல தயாரிப்பாளரின் மகள் பிரபல நடிகை. அவர் வேறு யாருமல்ல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் என கூறப்படுகிறது.

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகளால் இந்த படத்தில் நடிக்க  முடியாது என கூறியுள்ளாராம். பாலிவுட் படங்களில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கவும் பலதடவை படக்குழுவினர் கேட்டு கொண்டனர் அப்போதும் போனிகபூர் தடுத்து உள்ளாராம்.

தனது மகள் வேறு எந்த ஹீரோவுடன் நடித்தாலும் ஓகே சொல்லும் போனி கபூர் தனுஷை மட்டும் குறிவைத்து அவரது படத்தில் நடிக்க வைக்க விடாமல் தடுத்து வருகிறாராம். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment