என்னுடைய ஆண் நண்பர்கள் அந்த மாதிரியான இடத்திற்கு கூப்பிட்டாங்க.. உண்மையை சொல்லி வருத்தப்பட்ட நடிகை மீனா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை மீனா. இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி உடன் முத்து, வீரா.. விஜயகாந்த் உடன் சேதுபதி ஐபிஎஸ்.. சத்யராஜ் உடன் தாய் மாமன்.. சரத்குமாருடன் நாட்டாமை, நாடோடி மன்னன்.. அர்ஜுனுடன் செங்கோட்டை.. அஜித்துடன் வில்லன் என பல்வேறு டாப் நடிகர்களுடன்..

நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி மட்டுமே கண்டு வந்த இவர் திடீரென 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறாள் தொடர்ந்து  சினிமா, குடும்பம் என ஓடிக்கொண்டு இருந்த மீனாவுக்கு 2002 ஆம் ஆண்டு சோகமான ஆண்டாக அமைந்தது.

மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிய மீனா கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி மிண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் இந்த நிலையில் தனக்கு நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

அப்படி அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சொன்னது.. சினிமாவில் அறிமுகமான போதில் எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள்.. அப்பொழுது தான் பார்ட்டி, பப் கலாச்சாரம் எல்லாம் வளர்ந்து கொண்டு இருந்த நேரம் என்னையும் இரவு நேரத்தில் பார்ட்டி, பப் என என்னுடைய நண்பர்களே அழைத்து இருக்கிறார்கள் நானும் செல்கிறேன் என என்னுடைய அம்மாவிடம் கூறுவேன் என் அம்மா அப்படியெல்லாம் போகக்கூடாது..

உன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் செய்ய வேண்டும் என கண்டித்தார் அப்பொழுது என் அம்மாவின் பேச்சு எனக்கு கசப்பாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு மகளின் தாயாக அந்த என்னுடைய அம்மாவின் கண்டிப்புக்கு காரணம் என்ன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது ஒருவேளை அப்படியான விஷயங்களில் நான் மூழ்கி இருந்தால் என்னுடைய வாழ்க்கை திசை மாறி போயிருக்க வாய்ப்பு அமைந்திருக்கும்.

அந்த விஷயங்களில் மூழ்கியதால் சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் இழந்த பல நடிகைகளையே எனக்கு தெரியும் எனவே பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடப்பது தான் ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என நடிகை மீனா கூறி உள்ளார். சீனாவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று உள்ளது.

Leave a Comment

Exit mobile version