என்னுடைய முதல் காதல் இங்கு தான் அரங்கேறியது.? மனம் திறந்த சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினி.! பல வருடம் கழிந்து வெளியான தகவல்.

0

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருவதால் இன்னும் தொட முடியாத நிலையிலேயே இருந்து வருகிறார். கடைசியாக தர்பார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அண்ணாத்த என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வருகின்ற தீபாவளி அன்று மக்களுக்கு விருந்து படைக்க ரெடியாக இருக்கிறது ரஜினி இந்த படத்தை முடித்தவுடன் நேரடியாக அமெரிக்கா சென்று தற்போது தனது உடலை பரிசோதித்து வருகிறார்.

இப்படி உடலையும், சினிமாவையும் பார்த்து வரும் ரஜினிக்கு ஏகப்பட்ட தொண்டர்கள் அவருக்கு பக்கபலம் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ரஜினி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டில் திரையுலகம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது அதில் கலந்துகொண்ட ரஜினி ஒரு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.

அப்போது மேடையில் பங்கேற்ற ரஜினியை பார்த்து பிரபல நடிகை லதா சில கேள்விகளை முன்வைத்தார் அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் எனது முதல் காதல் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுது வந்தது ஆனால் அந்த காதல் வெற்றி பெறவில்லை யாராலும் முதல் காதலை மறந்து விட முடியாது என கூறினார் இச்செய்தி தற்போது இணையதளத்தில் வேகம் எடுத்துள்ளது.